இன்றைக்கு யார் யாரோ கிளம்பி திமுகவை அழித்துவிடலாம், ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது என, முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக பிரமுகர் இ¢ல்லத் திருமணத்தை நடத்திவைத்துப் பேசிய அவர், நெருக்கடி காலத்தில் திமுகவில் தலைவர் முதல் தொண்டர்கள் வரை, பலர் பல்வேறு கொடுமைகள் அனுபவித்தனர். எனவே, எந்த தியாகத்துக்கும் திமுகவினர் தயாராக இருப்பார்கள் என்று முதல்வர் குறிப்பிட்டார்.
இன்றைக்கு யார் யாரோ கிளம்பி, திமுகவை அழித்துவிடலாம், ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள், எந்த கொம்பனாலும் இந்த இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது என்றும், முதல்வர் எச்சரித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை எதிர்த்து, சட்ட போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், வாக்காளர் திருத்த பணிகளை கவனிக்க வேண்டிய அவசியம், நமக்கு உள்ளது என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.

























