கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்களிடம் 3-வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
தமிழக காவல் துறையின் சிறப்பு குழுவிடம் இருந்து விசாரணையை ஏற்றது முதல். சிபிஐ அதிகாரிகள், கரூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி பல்வேறு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்து வருகின்றனர்.
இன்று 8 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம், விஜய் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அழைப்பு விடுத்தது யார், சிகிச்சையில் சேர்க்கப்பட்டபோது பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை எவ்வாறு இருந்தது, அனைத்து ஆம்புலன்சுகளும் முறையான உரிமம் பெற்றவையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

























