இந்தியாவும், பூடானும் வலுவான நல்லுறவுகளைக் கொண்டிருப்பதாகவும், பூட்டான் மன்னருடன் தாம் நடத்திய பேச்சுகள் ஆக்கப்பூர்வமான வகையில் அமைந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக பூட்டான் தலைநகர் திம்பு சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டு மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக்கை சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதற்காக பூட்டான் அரண்மனைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பூட்டான் மன்னருடனான பேச்சுகள் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையில் ஆக்கப்பூர்வமான வகையில் பேச்சுகள் அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பூட்டான் 4-ம் மன்னரின் 70-வது பிறந்தநாள் விழாவில் பேசிய பிரதமர் மோடி, இருநாடுகளும் இயல்பாகவே வலுவான நல்லுறவுகளைக் கொண்டு திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

























