துருக்கி ராணுவ விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர்.
துருக்கி ராணுவத்திற்கு சொந்தமான சி-130 ரக சரக்கு விமானம் நேற்று அஜர்பைஜானில் இருந்து புறப்பட்டது. துருக்கி நோக்கி வந்துகொண்டிருந்த அந்த ராணுவ விமானத்தில் 20 பேர் பயணித்தனர்.
ஜார்ஜியா எல்லைக்குள் பறந்துகொண்டிருந்த அந்த விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் வெடித்துச் சிதறியது. விமானத்தில் பயணித்த 20 பேரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து, விபத்து நடந்த பகுதியில் மிட்புபணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


























