தே.மு.தி.க.-வின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், தேர்தலில் கூட்டணி குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள 74 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்தும், அடுத்த மாதம் 28-ம் தேதி விஜயகாந்தின் 2-வது குருபூஜையை சிறப்பாக நடத்துவது குறித்தும், அப்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் கடலூரில் வரும் ஜனவரி மாதத்தில் கட்சியின் மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவது பற்றியும் வாக்குச்சாவடி முகவர்கள் குழுவை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.

























