பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.அந்த கூட்டணி, ஆட்சியை தக்க வைக்க உள்ளதால் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், 46 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்களில் வெற்றி தேவை என்ற நிலையில், பிஜேபி – ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்.டி.ஏ 208 இடங்களில், முன்னிலை வகிக்கிறது. பிஜேபி மட்டும் 96 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 84 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி 28 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், பிற கட்சிகள் 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த கட்சியின் வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட, முன்னிலை வகிக்கவில்லை.


























