முன்னாள் அமைச்சர் ஆர்.கே.சிங், பிஜேபி-யிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அதானி நிறுவனத்துடன் பீகார் அரசு போட்ட மின்சார ஒப்பந்தத்தில் 62 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் குற்றம்சாட்டியிருந்தார். இதன்மூலம் கட்சி விரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, 6 ஆண்டுகளுக்கு பிஜேபி-யிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக, கட்சித் தலைமை அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஒரு வாரத்தில் அவர் விளக்கம் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் எம்எல்சி அசோக்குமார் அகர்வால், கதிஹர் மேயர் உஷா அகர்வால் ஆகியோரும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அவர்களும் பிஜேபி-யிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

























