தேர்தல் ஆணையமும், பிஜேபி-யும் கூட்டாக சேர்ந்து கொண்டுவந்துள்ள சதி திட்டம்தான் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாரில் தங்களுக்கு எதிரான வாக்குகளை நீக்கியதைப் போன்று, தமிழ்நாட்டிலும் எஸ்.ஐ.ஆர் திட்டத்தை கொண்டுவந்து. எதிர்ப்பு வாக்குகளை நீக்க பிஜேபி-யும், தேர்தல் ஆணையமும் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக கூறினார். இதன்மூலம் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக் குறியாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் காங்கிரஸ் சார்பில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியிருப்பதாக குற்றம்சாட்டினார்.

























