போலி வாக்காளர்கள் இருப்பதாக கூறும் திமுக அதனை சரிசெய்ய எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு ஒத்துழைத்து தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமன்றி பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களிலும் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதனிடையே எஸ்.ஐ.ஆர் பணிக்கு எதிராக வருவாய்த் துறையினர் நடத்தும் போராட்டத்தை, திமுக தான் தூண்டியுள்ளதாக தமிழக பி.ஜே.பி. தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

























