பீகாரில் புதிய அரசு நாளை பதவியேற்கும் நிலையில், பாட்னாவில் இன்று ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், நிதிஸ்குமார் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பீகாரில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம்-பிஜேபி உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய, தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது.
இந்த நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதா எம்எல்ஏக்கள், கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில், நிதிஷ்குமார் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர், இன்று மாலை ஆளுனரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார்.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், நாளை புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.


























