மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில், மெக்சிகோ அழகி முதல் பரிசை தட்டிச் சென்றார்.
மிஸ் யுனிவர்ஸ் என்பது சர்வதேச நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ளும், வருடாந்திர போட்டியாகும். இந்தாண்டுக்கான போட்டி, தாய்லாந்தில் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள், இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
போட்டியின் இறுதி சுற்றில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ், வெற்றி பெற்று, 2025ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டி சென்றார். 2-ஆம் இடத்தை தாய்லாந்து அழகியும், 3-ஆம் இடத்தை வெனிசுலா நாட்டு அழகியும் பிடித்தனர்


























