தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதாலும் மழை பொழிவால் குறைந்த பூக்கள் சாகுபடியாலும் பூக்களின் விலை உயர்வு கண்டுள்ளது. உசிலம்பட்டி மலர் சந்தையில், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு வரத்தும் குறைந்து காணப்படுகிறது. ஒரு கிலோ மல்லிகை பூ 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை சுற்றுவட்டார பகுதிகளில், விளைவிக்கப்படும் மல்லிகை, சம்பங்கி, முல்லை, கனகாம்பரம் பூக்கள், உசிலம்பட்டி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும். இந்நிலையில், பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. நாளை முகூர்த்த தினம் என்பதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வரத்து குறைந்ததால், விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.மல்லிகை பூ இன்று 4 ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்படுகிறது, இதே போல் கனகாம்பரம் கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கும், முல்லைப்பூ ஆயிரத்து 300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

























