இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 247 ரன்கள் குவித்துள்ளது.
கவுகாத்தியில் இன்று தொடங்கிய இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களான மார்க்ரம் 38 ரன்களிலும், ரிக்கல்டன் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிங்கிய கேப்டன் பவுமா திறம்பட விளையாடி 41 ரன்களும், ஸ்டப்ஸ் 49 ரன்களும் எடுத்து வெளியேறினர். இந்நிலையில், முதல்நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு, 247 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


























