வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் என்ற பெயரில் நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஐ.ஆர் குழப்பத்தால், கடந்த மூன்று வாரங்களில் 16 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் தங்களின் உயிரை இழந்துள்ளதாகவும், மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலை போன்றவற்றால் அவர்கள் மரணம் அடைந்திருப்தபாகவும் ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். எஸ்.ஐ.ஆர் என்பது சீர்திருத்தம் அல்ல, அது திணிக்கப்பட்ட அடக்குமுறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர்கள் தங்களை பட்டியலில் கண்டுபிடிக்க, ஸ்கேன் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பக்கங்களைப் புரட்ட வேண்டிய ஒரு சூழ்நிலையை எஸ்.ஐ.ஆர் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் உண்மையான வாக்காளர்களை சோர்வடையச் செய்து, வாக்காளர் மோசடியை தடையின்றி தொடர அனுமதிப்பதே இதன் நோக்கம் என்றும் குறை கூறியுள்ளார்.
உலக அளவில் அதிநவீன மென்பொருளை இந்தியா உருவாக்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையமோ இன்னமும் காகிதப் பயன்பாட்டில் மக்களை குழப்பி வருவதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

























