புயல் மற்றும் பருவமழையை எதிர்கொள்ள, தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் அமைக்கப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த பொருநை அருங்காட்சியகப் பணிகளை அமைச்சர் கே.என். நேரு இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20-ஆம் தேதி பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாக கூறினார்.

























