அதிமுகவில் அமித்ஷாவிற்கு சிறந்த அடிமை யார் என்பதில் போட்டி நிலவி வருவதாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
புதிய திராவிட கழகத்தின் ஆறாவது மாநில மாநாடு, ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய உதயநிதி திராவிடத்தையே விட்டுக் கொடுத்தவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றார். அமித் ஷாவின் ஆலோசனைப்படியே, செங்கோட்டையன் வேறு கட்சியில் சேர்ந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

























