இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை மையமாக கொண்ட ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இடையிலான போர் 2 ஆண்டுகளையும் கடந்து நீடித்தது. இதில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டினால் இரு தரப்பினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதையும்மீறி இருதரப்பிலும் பரஸ்பரம் தாக்குதல் நடந்து வருகிறது. இதனிடையே, ராபா பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மீது ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 5 ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில், ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக, நேற்று நள்ளிரவில் காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில், 2 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இருதரப்பினர் இடையேயும் மீண்டும் போர் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக, பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.


























