இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி, பிரிஸ்பேர்னில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். இருப்பினும் தொடக்க பேட்டர் ஸாக் க்ராவ்லே, ஜோ ரூட் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 135 ரன்களுடனும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.


























