திருப்பரங்குன்ற தீபத் தூண் விவகாரத்தில் தி.மு.க. அரசு மதக்கலவரத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தமிழக பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பி.ஜே.பி. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலவரத்தை ஏற்படுத்தியது காவல்துறை தான் என்றும் இந்து அமைப்பினர் அமைதியாக நின்றதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
பல இடங்களில் நீதிமன்ற தீர்ப்பை மதித்து கோவிலை இடித்ததாக கூறும் தி.மு.க. அரசு தீபத்தை ஏற்ற நீதிமன்றம் அனுமதி அளித்ததை ஏன் செயல்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

























