சென்னையில் இன்றும் 100 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
விமானிகளின் பணி நேர வரம்பு,விமானிகலி பற்றாக்குறை காரணமாக, கடந்த 6 நாட்களாக, இண்டிகோ விமானத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் 100 விமானங்களை, இண்டிகோ நிறுவனம் ரத்து செய்திருக்கிறது. விமானங்கள் ரத்தால் ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் கட்டணம் 5 முதல் 10 மடங்கு வரை உயர்ந்திருக்கிறது. ஆனால் விமானப் போக்குவரத்து சீரடையும் வரை, பிற ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதனிடையே விமானம் ரத்து, டிக்கெட் கேன்சல், வேறு தேதிக்கு டிக்கெட் மாற்றுதல் போன்ற பணிக்ளுக்காக விமான நிலையத்தில் உள்ள கவுண்டர்களில் பயணிகல் நீண்ட வரிசையில் காத்துள்ளனர். அவர்களுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் சமோசா, கேக்,குடிநீர் பாட்டில், ஜுஸ் பாக்கெட் உள்ளிட்டவற்றரை வழங்கினார்.ஒரிரு நாளில் விமான சேவைகள் முழுமையாக திரும்பும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
























