திருப்பரங்குன்றத்தை வைத்து கலவரத்தை தூண்ட பிஜேபி முயற்சிப்பதாக, திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார்.
நீதிபதி சுவாமிநாதன் பதவி விலக வலியுறுத்தி, சென்னையில் திராவிடர் தமிழர் இயக்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப.வீரபாண்டியன், திருப்பரங்குன்றத்தை கையிலெடுத்திருக்கும் பிஜேபி-யால் வெற்றிபெற முடியாது என்றும், தமிழ்நாட்டில் மத வெறிக்கு இடமில்லை என்றும் கூறினார்.

























