கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை தாக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மனித-வன விலங்கு மோதலை தடுக்க 5 பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
வால்பாறையில் 5 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று தேயிலை தோட்டத்தின் புதர் பகுதிக்குள் இழுத்து சென்று கொன்றது, சடலத்தை கைப்பற்றிய வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் வால்பாறையில் மனித-வன விலங்கு மோதலை தடுக்க குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தலைமை முதன்மை வனக் காப்பாளர் ராம சுப்பிரமணியன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநரும் இந்த குழுவில் இடம்பிடித்துள்ளார்.

























