வலிமையான கூட்டணியோடு 2026 தேர்தலை சந்திப்போம் என பிஜேபி முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார்.திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று தனக்கு தோன்றவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

























