தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று பணியில் இருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டதால் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்ததால், மேல் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
























