தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நடத்துவதற்கான முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்றும் தொடர்ந்தது.
எஸ்ஐஆர் நடைமுறைப்படி, நாட்டின் 140 கோடி மக்களும் தாங்கள் குடிமக்கள் என்பதை நிரூபிக்க வேண்டிருப்பதாக, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிஜாம் பாஷா வாதிட்டார். புதிய வாக்காளர்கள் மட்டுமே குடியுரிமைக்கான சுய விவரங்களை தாக்கல்செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டில் ஏராளமானோர் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை சென்றிருப்பதால், பொங்கல் பண்டிக்கை வரை எஸ்.ஐ.ஆர். கணக்கெடுப்பு பணிகளை நீட்டிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
























