நீதியரசர் சுவாமிநாதனுக்கு இசட் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நடிகையும் பிஜேபி நிர்வாகியுமான கஸ்தூரி வலியுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் தனியார் பல்நோக்கு மருத்துவமனை திறப்புவிழாவில் பிஜேபி கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் கஸ்தூரி கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து மற்றும் இஸ்லாமியர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது திமுக தான் என்றும் குற்றஞ்சாட்டினார். அத்துடன் திருப்பரங்குன்றம் வழக்கை விசாரிக்கும் நீதிபதி சுவாமிநாதனுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை வழங்க மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

























