சென்னை கிண்டியில் பிரம்மாண்டமான குழந்தைகள் நல மருத்துவனை அமைக்கும் பணிகளுக்கு விரைவில் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெங்கடாபுரம் திட்ட குடியிருப்பு பகுதியில் 2 கோடியே 59 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட இருக்கும் சீரமைக்கும் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோட்டூர்புரம் மற்றும் சைதாப்பேட்டை பகுதிகளில் 2 ஆயிரத்து 322 புதிய குடியிருப்புகள் பொங்கல் பண்டிகைக்குள் திறக்கப்படும் எனக் கூறினார். எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை போன்று 10 மடங்கு அதிக வசதி உள்ள மருத்துவமனை, கிண்டியில் கட்டப்பட இருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

























