கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில், 36 பதக்கங்கள் வென்ற தமிழக மாணவர்களுக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவாவில் தேசிய அளவிலான காரத்தே சாம்பியன் போட்டி, 2 நாட்கள் நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து சென்ற மாணவர்கள் 18 பேர், மொத்தம் 36 பதக்கம் வென்று அசத்தி இருக்கின்றனர். இந்நிலையில், விமானம் மூலம் சென்னை திரும்பிய அவர்களுக்கு, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக, மாணவர்கள் அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
























