கேரள மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வயநாடு மாவட்டத்தில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவியதையடுத்து பன்றி பண்ணைகளில் வளர்ப்பு பன்றிகள் அழிக்கப்பட்டதுடன் நோய் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன,
இந்த நிலையில் தற்போது பாலக்காடு மாவட்டம் திருமிட்டகோடு கிராமத்தில் பன்றி பண்ணையில் ஆப்பிறிக்கன் பன்றி காய்ச்சல் உறுதிபடுத்தபட்டதையடுத்து பண்ணையிலுள்ள பன்றிகளை அழிக்கும் பணியில் கால் நடைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அருகிலுள்ள பன்றி பண்ணைகளிலும் நோய்கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன,பன்றிகாய்ச்சல் மீண்டும் பரவியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

























