மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாடு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெற உள்ளது. வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிர் அணி மாநாடு என்ற பெயரில் நடைபெறும் இம்மாநாட்டில், திமுக-வின் 13 மாவட்டங்கள் மற்றும் 39 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் மகளிர் கலந்து கொள்ள உள்ளனர்.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை லட்சம் பேர் அமர்வதற்கான இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை, மாநாட்டு திடலுக்குள் இருசக்கர வாகன அணிவகுப்புடன் அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநட்டையொட்டி முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், திராவிட இயக்கத்தால் தலைநிமிர்ந்து வெற்றி நடை போடும் போராட்ட வரலாற்றையும், வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும் பல்லடத்தில் நடைபெறவுள்ள வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு சொல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.























