திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, உருவாக்கப்பட்டுள்ள “வரலாறு படைக்க இளம் தலைவர் வருகிறார்” என்ற பாடலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.
பின்னர் பேசிய அமைச்சர், ஏற்கெனவே கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் தற்போது உதயநிதி ஸ்டாலின் என்ற புதிய ஆயுதம் நம்மிடம் உள்ளதாகவும், அதைக் கொண்டு, கருத்துகளால் நாம் எதிரிகளைத் தாக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
திமுக-வின் வெற்றிக்காக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரசாரம் செய்தவர் உதயநிதி என்றும், கட்சியின் இளைஞர் அணியினர் அவரைப் போன்று, செயல்பட்டு, சட்டசபைத் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்றும், அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டார்.

























