தமிழ்நாடு 16 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மறுப்பது ஏன் என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த திமுக, அதற்காக குழு ஒன்றை அமைத்து அதன் இறுதி அறிக்கையைக் கூட இன்னும் பெறாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட அதிகமாக தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டதாக கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னொருபுறம் நிதி நெருக்கடி என்ற பழைய பல்லவியை மீண்டும், மீண்டும் பாடி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு ஊழியர்கள் தான் அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பு ஆவர். அரசின் நிர்வாக சுமைகளை சுமக்கும் அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

























