தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. நிர்வாகி ஓம் சக்தி செல்வமணி. தமிழக பிஜேபி இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் அமர்நாத்தின் ஓட்டுநரும் குன்றத்தூர் பகுதி நிர்வாகியுமான பிரகாஷ் உள்ளிட்ட 5 பேர் நேற்று முன்தினம் செல்வமணி வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தினர். செல்வமணி கதவைப் பூட்டிக் கொண்டு வீட்டுக்குள் இருந்ததா உயிர்தப்பினார். இதைத் தொடர்ந்து இந்தக் கும்பல் வீட்டில் இருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கி விட்டுச் சென்றது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பிரகாஷ, தினேஷ் குமார், யோகேஸ்வரன், சஞ்சய் மற்றும் 15ந்து வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அமர்நாத்தை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் அமர்நாத் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக இளைஞர் அணி மாநில தலைவர் சூர்யா அறிவித்துள்ளார்.

























