பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றது போன்று, தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக-வுடன் தொகுதிப்பங்கீடு பேச்சு நடத்துவதற்காக அகில இந்தியா காங்கிரஸ் செயலாளரும், மேலிடப் பொறுப்பாளருமான கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. சோடங்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கூடுதல் பொறுப்பாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ், மூத்த தலைவர்கள் திருநாயுக்கரசு, தங்கபாலு, கிருஷ்ணசாமி, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனம், வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், பீகாரில் பெற்ற வெற்றியைப் போன்று, தமிழ்நாட்டில் வெற்றி பெறமுடியாது என்று கூறினார்.























