பெருநாட்டில் ஏற்பட்ட துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, 2 படகுகள் மூழ்கியதில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்
தென் அமெரிக்க நாடான பெருவில், அமேசான் காட்டுப் பகுதியில் உகாயலி என்ற இடத்தில், ஆற்றின் முகத்துவாரத்தில் 2 படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்தப் படகுகளில் 50 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில், இரண்டு படகுகளும் மூழ்கின. இதில் இதுவரை 3 குழந்தைகள் உட்பட 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆற்று நீரின் வேகம் மற்றும் சுழற்சி காரணமாகவும், பனிமூட்டத்தாலும் மீட்புப் பணிகள் சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


























