தமிழகத்தில் டிட்வா புயல் எதிரொலியால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து அதிகாரிகள் இன்று முதல் ஆய்வு செய்ய உள்ளனர்.
டிட்வா புயல் எதிரொலியாக டெல்டா மாவட்டங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த நடுவிக்கோட்டையில் தொடர் மழையால் 100 ஹெக்டேர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதிகாரிகள் பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் குறித்து, இன்று முதல்கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு இருந்தால், நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

























