கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையத்தில், வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. 14 தளங்களை கொண்ட இந்த குடியிருப்பில், மொத்தம் ஆயிரத்து 800 வீடுகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று இந்த குடியிருப்பின் சி பிளாக்கில் உள்ள 10 வீடுகளில், கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து, தீவிர விசாரணை நடத்திய போலீஸார், கொள்ளையர்கள் குளத்துப்பாளையம் பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்டபோது, போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்துள்ளனர்.
சுதாரித்த தனிப்படை போலீஸார், கொள்ளையர்கள் 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். பிடிபட்ட மூவரும், வடமாநில கொள்ளையர்கள் என தெரியவந்திருக்கிறது. தற்போது, மூவரும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

























