பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 289 கோடியே 63 லட்சம் ரூபாய், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதங்களில், பருவம் தவறிப்பெய்த மழையால் 5 லட்சத்து 66 ஆயிரம் ஏக்கரில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சேதமடைந்ததாக, அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் உத்தரவுப்படி, பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 80 ஆயிரம் வேளாண் பயிர் விவசாயிகளுக்கு 254 கோடியே 36 லட்சம் ரூபாயும், 80 ஆயிரத்து 383 தோட்டக்கலை விவசாயிகளுக்கு 35 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

























