அரசியல் அமைப்பு சட்டத்தை ஆளுகிறவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னையில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நடைப்பெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர் இந்த தேசத்தை அரசியல் அமைப்புச் சட்டம் தான் ஆளுவதாக கூறினார்.
ஆனால் இந்த தேசத்தை பிளவுபடுத்த வேண்டும் என்று சில மதவாத சக்திகள் துடிதுடித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல் அமைப்பு சட்டத்தை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்றும் செல்வபெருந்தகை குறிப்பிட்டார்.

























