தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி, 489 ரன்களும் இந்திய அணி, 201 ரன்களும் எடுத்தன. 288 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென்னாப்பிரிக்கா 260 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து 549 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன், இந்திய அணி களமிறங்கியது. ஆனால் இந்திய அணியின் பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பி ஏமாற்றம் அளித்தனர். 5ஆம் நாளான இன்று இந்தியா 104 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் 408 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றது. இந்திய அணியின் படுமோசமான ஆட்டத்தால், ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

























