டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6-ம் தேதியும் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருந்தது அம்பலமாகியுள்ளது.
செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த 10-ம் தேதியன்று கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் உமர் உன் நபி என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. உமர் நபி-க்கு ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும், லக்னோ அருகே ஃபரிதாபாத்திலும், தெற்கு காஷ்மீரிலும் இருந்து செயல்பட்டு வந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலுக்காக 20 லட்சம் ரூபாய் நிதி திரட்டியதுடன், 3 லட்சம் ரூபாக்கு வெடிமருந்துப் பொருள் வாங்கியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே, உமர் நபியின் மூன்றாவது காரை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கும், அடுத்ததாக வரும் டிசம்பர் 6-ம் தேதி, பாபர் மசூதி இடிப்பு நாளன்றும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. தற்போது அந்த தாக்குதல் முயற்சிகள் அனைத்து முறியடிக்கப்பட்டுள்ளது.


























