சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி இன்று ஆய்வு நடத்தினார்.
டிட்வா புயல் தாக்கம் காரணமாக தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள் மட்டும் அல்லாது தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
நாளையும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழை நிலவரம் குறித்தும் தொடர்புடைய மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

























