புயல் மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு, ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, வருவாய் மற்றும் பேரிடர் தணிப்பு துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
டிட்வா புயல் வலுவிழந்தாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், கனமழை காரணமாக ஆயிரத்து 601 வீடுகள் சேதம் அடைந்திருப்பதாகவும், 85 ஆயிரத்து 521 ஹெக்டேர் பயிர்கள், தண்ணீரில் மூழ்கி இருப்பதாகவும் கூறினார்.
சேதம் அடைந்த பயிர்களுக்கு, ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகவும் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
























