முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் முடிவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க நாளை மாலை 6 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

























