பெரியார், அண்ணா, கருணாநிதியால் வளர்க்கப்பட்ட திராவிட இயக்கக் கொள்கைகளை, தமிழ்நாட்டில் கட்டிக்காத்துக் கொண்டிருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று, திமுக எம்.பி. ராசா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, மத்திய மோடி அரசு விஸ்வகர்மா என்ற திட்டத்தைக் கொண்டு வந்து, மீண்டும் குலக்கல்வியை திணிக்கப் பார்க்கிறது என்று குறைகூறினார்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ச்சியடைந்திருந்த தமிழகத்தில் ஆரியத்தின் வரவால், பின் தங்கியதாகவும், ஆனால் திராவிட இயக்கம் உருவான பின்னர், அடித்தட்டு மக்கள் கல்வி பயில முடிவதாகவும் கூறினார்.

























