டிசம்பர் 1 முதல் 17-ந்தேதி வரை, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடக்கிறது. இந்த கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக, சென்னையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர்.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு, எஸ்.ஐ.ஆர் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இதுதவி, திமுக எம்.பிக்களின் செயல்பாடுகள் குறித்தும், முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

























