அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை, தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் திமிரை அடக்குவோம் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் 605 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிவைத்ததோடு, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
விழாவில் பேசிய அவர், மத்திய அரசு போதிய நிதியை வழங்கவில்லை என்றபோதிலும், திமுக அரசு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார். தி.மு.க. ஆட்சியில் இருப்பதால் தான் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து தமிழகத்தை பழிவாங்குவதாக குற்றம்சாட்டினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் அளித்த பேட்டியில், அமைதிப் பூங்காவான தமிழகத்தை தீவிரவாத மாநிலம்போல் சித்தரிக்க முயன்று, திமிரெடுத்துப் பேசியிருப்பதாக முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.

























