நடப்பாண்டில் மட்டும் அதிமுக ஆட்சியில் இருந்து 13 மடங்கு அதிகமாக மாற்றுத் திறனாளிகளுக்கு ஆயிரத்து 432 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சென்னை மேற்கு சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 81 நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று நலத்திட்ட உதவி களை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், மாற்றுத்திறனாளிகளுக்காக மாதம் ஆயிரம் ரூபாய் என்று இருந்த ஊக்கத்தொகையை 2 ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில், 41 ஆயிரத்து 755 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும், திமுக ஆட்சியில் தான் அவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார்.
























