ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ஆயிரத்து 760 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஒரு சவரன் 93 ஆயிரத்து 600 ரூபாயாக இருக்கிறது.
அண்மைக் காலமாக ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு, தங்கத்தின் விலை கணிசமாக குறைந்தது. இந்நிலையில், இப்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு, 3 ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்திருக்கிறது.
சென்னையில் ஒரு கிராம் தங்கம், 11 ஆயிரத்து 700 ரூபாயாகவும், ஒரு சவரன் 93 ஆயிரத்து 600 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்திருக்கிறது. வெள்ளி ஒரு கிராம் 170 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.























