திமுக ஆட்சியை கவிழ்க்க இடி,சிபிஐ, தேர்தல் ஆணையம் ஆகியவற்றை வைத்து பிஜேபி சதி செய்கிறது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வழக்கறிஞர் அணி சார்பில் மதசார்பின்மை என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கலந்துகொண்டபின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எடப்பாடி பழனிச்சாமியால் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது என அவர் கூறினார். பழனிசாமி பிஜேபி உடன் சேர்ந்துகொண்டு திமுகவுக்கு எதிராக செயல்படுவதாகவும்,ஆனால் அவரால் ஏதும் செய்ய முடியாமல் ஏமாற்றமே மிஞ்சும் என்றும் RS பாரதி கூறினார்.

























